சினிமா

நான் இறந்தபிறகு இதை மட்டும் செய்துவிடுங்கள்.! கண்ணீருடன் பரவை முனியம்மா விடுத்த கோரிக்கை!!

Summary:

Paravai muniyamma last wish

oதமிழ் சினிமாவில் தூள் என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானார் பரவை முனியம்மா.  இவர் மதுரை மாவட்டத்திலுள்ள பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப் பெற்றார். பரவை முனியம்மா  காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன், ஜெய்சூர்யா, ராஜாதி ராஜா, வீரம், மான் கராத்தே என 25 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.

மேலும் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல்  என்ற நிகழ்ச்சியையும்  தொகுத்து வழங்குகிறார். மேலும் அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து வந்தார். 

அதனை தொடர்ந்து பரவை முனியம்மாவின் ஏழ்மை மற்றும் முதுமையை கருத்தில் கொண்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 6 லட்சம் ரூபாய் இருப்புநிதியும் அதன் மூலம் குடும்ப செலவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயும் மற்றும் மாதாந்திர மருத்துவச் செலவினை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்கவும் ஆணையிட்டிருந்தார்.

 இந்நிலையில் மாற்றுத்திறனாளி மகனுடன் வசித்து வந்த பரவை முனியம்மா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு உடல் நிலை சரியில்லை எனவும், தான் இறந்ததற்கு பிறகு தனக்கு வழங்கி வரும் நிதி உதவியை எனது மகனுக்கு வழங்கவேண்டும் எனவும் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.


Advertisement