சினிமா

பாண்டியன் ஸ்டோர் முல்லை கையில் குத்தியிருக்கும் மர்மமான டாட்டூ? அப்படி என்னதான் இருக்கு?

Summary:

Pandiyan stores mullai hidden tattoo secrets

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என அழைக்கப்படும் சித்ரா. விஜய் டிவி, மக்கள் டிவி, ஜீ தமிழ் என பலவேறு முன்னணி தொலைக்காட்சிகளில் VJ வாக வேலைபார்த்துள்ளார் சித்ரா.

தற்போது கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும்போது சித்ரா தனது கையில் இருக்கும் டாட்டூவை மறைத்து மறைத்து நடிப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசிவந்தனர்.

சரி, அப்படி அவரது கையில் என்னதான் டாட்டூ உள்ளது என்று பார்த்தால், மைக்கை டாட்டூவாக போட்டுள்ளார் சித்ரா. நடிக்க வருவதற்கு முன் RJ , VJ வாக இருந்ததால் தன் தொழில் மீது கொண்ட பக்தியால் மைக்கை டாட்டூவாக போட்டுள்ளாராம் சித்ரா.


Advertisement