கண்கலங்க வைக்கும் காட்சி.. சித்ராவின் மரணம்.. கதறி அழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்..

கண்கலங்க வைக்கும் காட்சி.. சித்ராவின் மரணம்.. கதறி அழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்..


Pandiyan stores kathir viral video after mullai suicide

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டநிலையில் அவருடன் பாண்டியன் தொடரில் ஜோடியாக நடித்துவந்த கதிர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம், அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தொடரின் பெரிய வெற்றிக்கு பின்னால் இந்த தொடரில் கதிர் - முல்லை 
கதாபாத்திரத்தில் வரும் குமரன் - சித்ராவும் ஒரு காரணம்.

VJ Chithra

ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடிக்கு பெரிய ஆதரவு உள்ளது. இருவரும் காதலித்துவருவதாகவும் கூட பேச்சுக்கள் அடிபட்டது. இந்நிலையில் சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். கணவன், தாய் என இரு தரப்பிலும் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சித்ரா குறித்தும், அவரை திறமைகள் குறித்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்துவந்த கதிர் கதறி கதறி அழுதவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.