படித்து முடித்த கையோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விட்டு விலகும் முல்லை.. இதுதான் காரணமா?..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!Pandian stores mullai going movie

விஜய் தொலைக்காட்சியில் சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சீரியலில் ஒன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்". இந்த நெடுந்தொடர் யதார்த்தமான குடும்ப கதையினை கொண்டு, அண்ணன் தம்பிகளுக்கிடையான பாசகதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவியா, குமரன், தங்கராஜன், சரவணன் நடித்து வருகின்றனர். நாளுக்குநாள் இந்த சீரியலுக்கென தனிரசிகர் பட்டாளமே உருவாகி வரும் நிலையில், தற்போது இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இது தொடர்பான வீடியோவை சமீபத்தில்கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் வெளியிட்டிருந்தார்கள். தற்போது பல புதிய திருப்பங்களுடன் இந்த சீரியல் செல்வதால் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலகுவது குறித்து காவியா அறிவுமணி பேட்டி ஒன்றில் பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் காவியா அறிவுமணி.  இவர் சீரியல் நடித்துக் கொண்டிருந்தாலும் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், காவியா சீரியலை விட்டு விலகுகிறார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ்

அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. காவியா சிலதினங்களுக்கு முன்னதாக ஆர்க்கிடெக்சர் படிப்பை முடித்து பட்டம் பெற்றதால் ரசிகர்கள் பலரும் காவியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், காவியா சீரியலை விட்டு விலகிவிட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.