புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
3 முறை தற்கொலை முயற்சி! 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் பாக்யராஜின் மகள் எடுத்த அதிரடி முடிவு! வரவேற்கும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் நடிகர் , இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்குபவர் நடிகர் பாக்யராஜ். இவருக்கும், இவரது படங்களுக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் சரண்யா 2006 ஆம் ஆண்டு வெளிவந்த பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் நடிகர் பிருத்விராஜ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் நடிப்பை விட்டுவிட்டு அவர் அமெரிக்காவிற்கு படிக்க சென்றார்.
அங்கு அவருக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்தியர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்த நிலையில் அதிலிருந்து மீள முடியாமல் சரண்யா மூன்று முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் தந்தை பாக்யராஜ் எவ்வளவோ கேட்டும் தனக்கு திருமணம் வேண்டாம் என அவர் பிடிவாதமாக உள்ளார்.
இந்நிலையில் சரண்யா தற்போது 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் கதாநாயகியாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது காமெடி கலந்த அரசியல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.