"இதுக்கு நீங்க ரொம்ப வெக்கப்படணும் சென்றாயன்" சந்திரயான் வெற்றி குறித்து பாகிஸ்தான் நடிகையின் அதிரடி ட்வீட் ..

பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகையான சேகர் ஷின்வாரி, இந்தியாவின் சந்திரயான்-3 லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " இந்தியா எங்களுக்கு பகை நாடாக இருந்தாலும், விண்வெளி ஆராய்ச்சியில் வரலாற்று சாதனை படைத்த இந்தியாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானிற்கும் இடையே நிறைய இடைவெளி இருப்பதை எல்லா துறைகளிலும் காணலாம். இந்தியாவின் இந்த சாதனையை செய்ய பாகிஸ்தானுக்கு இன்னும் 2,3 தசாப்தங்கள் ஆகும். அதற்காக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்." என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நடிகை ஒருவர்,இந்தியாவின் சாதனையை பாராட்டியும், தன் சொந்த நாட்டை விமர்சித்தும் ட்வீட் செய்திருப்பதால் ஒருபக்கம் அவருக்குப் பாராட்டும், ஒரு பக்கம் குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது