பரிதாபம்..! படவாய்ப்புகள் இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நிலைமைக்கு சென்ற பிரபல நடிகர்..! வைரல் வீடியோ..! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

பரிதாபம்..! படவாய்ப்புகள் இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நிலைமைக்கு சென்ற பிரபல நடிகர்..! வைரல் வீடியோ..!

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் நான்காம் முறையாக இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக பல துறைகள் மூடப்பட்டுள்ளன. அதில் சினிமா துறையும் ஒன்று.

ஆனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் ஒரு சில பணிகளை தொடங்கலாம் என அரசு அறிவித்தது. ஆனால் சினிமா துறைக்கு மட்டும் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமாவில் தினக்கூலிக்கு வேலைக்கு செல்பவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்துள்ள 'ட்ரீம் கேர்ள்' படத்தில் நடித்துள்ள சோலங்கி திவாகர் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேலும் இந்நிலை குறித்து திவாகர் கூறியதாவது தனது குடும்பத்தின் அன்றாட தேவை மற்றும் வீட்டு வாடகை கூட செலுத்த பணமில்லாத காரணத்தால் தெருவில் பழம் விற்று அதன் மூலம் தேவைகளை பூர்த்தி செய்வதாக கூறியுள்ளார். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo