தமிழகம் காதல் – உறவுகள்

சினிமாபாணியில் கணவரோடு நெருங்கி வாழவிடாமல் முதலாளி செய்த காரியம்.!இறுதியில் நேர்ந்த விபரீதம்!!

Summary:

Owner try to kidnap married girl

ஈரோடு மாவட்டம் தொராயன்மலைப் பகுதியில் வசித்து வருபவர் தங்கமணி. இவர் சுபாஷ் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடன் அங்கு பல பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
 மேலும் அந்த தொண்டு நிறுவனத்தில் அவரது வீட்டிற்கு அருகில் இருந்த பெண் ஒருவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணின் மீது ஆசை கொண்டு தங்கமணி அவரிடம் மிகவும் நெருக்கமாக அன்பாக இருப்பது போல நடித்து வந்துள்ளார்.

இந்நிலையிலேயே அப்பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. மேலும் திருமணம் நடைபெற்று விட்டால் அவர் தன்னை விட்டு சென்று விடுவார் என்று எண்ணிய தங்கமணி திருமணத்தை நிறுத்த பல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். ஆனால் அதனையும் மீறி திருமணம் நடைபெற்ற நிலையில் தங்கமணி அப்பெண் அவரது கணவருடன் நெருக்கமாக இருக்கக் கூடாது என எண்ணியுள்ளார்.மேலும் அதற்காக அப்பெண்ணிற்கு அடிக்கடி போன் செய்து நீண்ட நேரம் பேசி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

 

இதனால் கடுப்பான கணவர் பலமுறை அப்பெண்ணை கண்டித்தும் வந்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் தங்கமணி சென்னையில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை கீழே வர கூறியுள்ளார்.பின்னர் அவரை நம்பி கீழே வந்த பெண்ணை காரில் கடத்தி செல்ல முயற்சி செய்துள்ளார். உடனே இதனை கண்டு உஷாரான அவரது கணவர் காரை மடக்கி பிடித்து தனது மனைவியை காப்பாற்றியுள்ளார்.அதோடு அவர்களை பிடித்து  போலீசில் ஒப்படைத்தார்.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement