சினிமா

பார்ப்போரை நடுங்கவைக்குமாறு, அந்த இடத்தில் நடிகை ஓவியா குத்தியுள்ள டாட்டூ! வைரலாகும் வீடியோ இதோ!

Summary:

Oviya snake tatoo in leg

தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. அதனைத் தொடர்ந்து அவர் கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், மதயானைக்கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். மேலும் அவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது. ஓவியா பிக்பாஸ் வெற்றியாளராக வருவார் என ரசிகர்களால் எதிர்பார்த்த நிலையில், மற்றொரு போட்டியாளரான ஆரவ்வுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சையால், தற்கொலை முயற்சி செய்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றபட்டார். 

நடிகை ஓவியா எதையும் மிகவும் வித்தியாசமாக செய்யக்கூடியவர். இந்நிலையில் அவர் தற்போது தனது காலில் கொலுசுக்கு பதிலாக பாம்பின் உருவத்தை டாட்டூவாக போட்டுள்ளார். மேலும் அதனை மை லிட்டில் மாஸ்டர் என  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர் இதற்கு முன்பு ஒரு பெண்ணின் உருவத்தை தனது வலது கை தோள்பட்டையில் டாட்டூ குத்தியுள்ளார். 


Advertisement