சினிமா

சர்கார் இசைவெளியீடு விழாவில் தளபதி விஜய் பேசியதற்கு பதிலடி கொடுத்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்...!

Summary:

ops-speaks-about-vijay's-speak

சர்கார் இசைவெளியீடு விழாவில் தளபதி விஜய் பேசியதற்கு பதிலடி கொடுத்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்...! 

கடந்த காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி அன்று மாலை சர்க்கார் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் நிறைய பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள். விழாவில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் அதில் பேசினார்கள். தளபதி விஜயும் பேசினார். அந்த விழாவில் தளபதி விஜயின் பேச்சு தான் மிகவும் சிறப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். 

இந்நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் பேசும் போது ” நான் முதலமைச்சரானால் என்ன செய்வேன் என்று கூறியுள்ளார் “. அந்த பேச்சுக்கு  பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 
”தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களின் ஆசையும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான், அது போல நடிகர் விஜய்க்கும் அந்த ஆசை உள்ளது என கூறியுள்ளார். 

இதனால் ரசிகர்கள் அனைவரும் அவரவர் கருத்துக்களை நல்ல முறையிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டித்தும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். 


Advertisement