சினிமா

அசால்டாக பாம்பை மூக்கில் விட்டு வாய் வழியே எடுத்த முதியவர்! பிரபல நடிகர் வெளியிட்ட ஷாக் வீடியோ! குவியும் கண்டனங்கள்!!

Summary:

வயதான முதியவர் ஒருவர் பாம்பு ஒன்றினை மூக்கில் விட்டு வாயின் வழியே வெளியே எடுத்த வீடியோ ஒன்

வயதான முதியவர் ஒருவர் பாம்பு ஒன்றினை மூக்கில் விட்டு வாயின் வழியே வெளியே எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் வில்லனாகவும், சூர்யா நடிப்பில் வெளிவந்த அஞ்சான் படத்தில் அவருக்கு நண்பராகவும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் வித்யூத் ஜமால். இவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த சில காலங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வயதான முதியவர் ஒருவர் சிறிய பாம்பு ஒன்றை தனது மூக்கின் உள்ளே விட்டுள்ளார். பின்னர் அதனை தனது வாயின் வழியே வெளியே எடுத்துள்ளார்.

இந்த வீடியோ பெருமளவில் வைரலான நிலையில் சிறிய பாம்பு துடிதுடித்தும் அதனை பொருட்படுத்தாமல் முதியவர் செய்த இந்த காரியத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தவறு எனவும், அவர் பாம்பினைப் துன்புறுத்துகிறார் எனவும் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.


Advertisement