மகனை காப்பாற்ற போராடும் தாய்! ஒவ்வொரு செகண்டும் மெய்சிலிர்க்க வைத்த நயன்தாராவின் O2 பட ட்ரைலர்!!

மகனை காப்பாற்ற போராடும் தாய்! ஒவ்வொரு செகண்டும் மெய்சிலிர்க்க வைத்த நயன்தாராவின் O2 பட ட்ரைலர்!!


O2 movie trailer released

அறிமுக இயக்குனர் ஜி.எஸ் விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் O2. இந்த திரைப்படத்தை  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் நயன்தாரா ஒரு சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார். 

நயன்தாராவின் மகனாக யூடியூப் பிரபலமான சிறுவன் ரித்விக் நடித்துள்ளார்.  இப்படம் வினோத நோயால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் பேக் உதவியுடன் வாழும் மகனுடன் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக பூமியில் வெடிப்பு ஏற்பட்டு பேருந்து பாதாளத்திற்குள் சென்றுவிடுகிறது. அங்கு மூச்சு விட முடியாமல் பயணிகள் அனைவரும் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் மகனின் ஆக்சிஜனை பறிக்க நினைக்கும் சக பயணிகளிடமிருந்தும், பாதாளத்தில் இருந்தும் ஒரு தாய் எவ்வாறு போராடி மகனை காப்பாற்றுகிறார் என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதன் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. O2 படம் ஜூன் 17 டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.