அவர் வயசுலதான் பெரியவர்! ஆனால்.. சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து தள்ளிய பிரபல இளம்நடிகை!!

அவர் வயசுலதான் பெரியவர்! ஆனால்.. சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து தள்ளிய பிரபல இளம்நடிகை!!


nivetha-thomas-talk-about-rajini

பாபநாசம் திரைப்படத்தில்  நடிகர் கமல்ஹாசனுக்கு மகளாகவும், ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

அப்பொழுது அவர், ரஜினிகாந்துடன் ஒரு காட்சியில் நடித்தாலே போதும் என பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால் எனது அதிர்ஷ்டம் அவருக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி வயதில் மட்டும்தான் பெரியவர். ஆனால் படப்பிடிப்பில் சிறுவயதினர் போல துள்ளி குதித்துக்கொண்டு, அங்குமிங்கும் நடந்து கொண்டு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டை சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என கவனிப்பார்.

rajini

மேலும் அவருடன் அமர்ந்திருந்தால், சத்தான உணவு மற்றும் ஆன்மீக விஷயங்கள் குறித்து பேசுவார். மேலும் இந்த வயதிலும் அவர் தவறாமல் நாள்தோறும் இரு வேளைகளும் உடற்பயிற்சி செய்வார். மேலும் உணவு கட்டுப்பாட்டையும் பின்பற்றுகிறார் என கூறியுள்ளார்.