சினிமா Covid-19

என்ன சொல்றீங்க!! நடிகை நிவேதா தாமஸ்க்கு கொரோனா தொற்று!! அவரே வெளியிட்ட தகவல்..

Summary:

நடிகை நிவேதா தாமஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகை நிவேதா தாமஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

நாள்தோறும் 300 கும் குறைவாக பதிவாகிவந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3000 ஆயிரத்தை தாண்டி பதிவாகிவருகிறது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி சச்சின் போன்ற விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நிவேதா தாமஸ் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளர். ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்த இவர், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் குணமாகிவிடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Advertisement