சினிமா

இனிமேலும் பொறுக்க முடியாது! பொங்கி எழுந்த நித்யா மேனனின் ஆவேச வீடியோ!

Summary:

Nithyamenan angry video


மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நித்யா மேனன் அதனை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தி அயர்ன் லேடி என்ற படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க ஒப்பந்தமானவர் அதற்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அதே சமயம், மலையாளத்தில் இவர் நடித்துள்ள கொளம்பி என்ற படமும், இந்தியில் அக்‌‌ஷய் குமாருடன் நடித்துள்ள மி‌ஷன் மங்கள் என்ற படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இதுவரை தென்னிந்திய சினிமாவில் மட்டுமே நடித்துவந்த நித்யா மேனன் தற்போது மிஷன் மங்கள் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகம் ஆகிறார்.

தற்போது கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நித்யா மேனன் சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய படம் பற்றித்தான் பதிவிட்டு வந்தார். வெள்ளம் பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

இதை பார்த்து கோபமடைந்த நித்யா மேனன் கோபத்துடன் பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "வழக்கமாக இதுபோன்ற ட்ரோல் வந்தால் கொண்டுகொள்ளமாட்டேன். ஆனால் இனிமேலும் பொறுக்க முடியாது. எல்லைமீறி செல்கிறது. முதலில் கண்ணாடியை பார்த்து நீங்கள் என்ன செய்தீர்கள் என பாருங்கள். நான் சமூக வலைத்தளத்தில் பதிவிடவில்லை என்பதற்காக எதுவும் உதவி செய்யவில்லை என அர்த்தமில்லை" என அவர் கூறியுள்ளார்.


Advertisement