சினிமா

இளைஞர்களின் கனவுக்கன்னி நந்தினி சீரியலின் நித்தியராம் மீண்டும் வருகிறார் மெகா தொடரில்! குதூகலத்தில் ரசிகர்கள்!

Summary:

Nithya raam in new serial


தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடர்கள் அனைத்தும் சினிமாவை போலவே போய்க்கொண்டிருக்கின்றன. அதிலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்தும் பிரமாண்டமாக போய்க்கொண்டிருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்திற்கும் இளம் வயது முதல் முதியவர் வரை ரசிகர்கள் உள்ளனர்.

 சன் தொலைக்காட்சியில் மக்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்ற தொடர்களில் ஓன்று நந்தினி சீரியல். இந்த தொடரின் நாயகிக்கு ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது. அந்த சீரியலின் கதாநாயகி நித்யாராம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நந்தினி தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் சன் தொலைக்காட்சியில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் நித்யராம். இந்த நிலையில் நடிகை குஷ்பூ முக்கிய வேடத்தில் நடித்துவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தெய்வமகள் தொடரில் நடித்த வில்லி நடிகை அண்ணியார் காயத்திரியும் வந்துள்ளார்.

தற்போது லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை நித்யாராம் வந்துள்ளதால் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்கள் நடிப்பதால் ரசிகர்கள் இந்த சீரியலை ஆவலுடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.


Advertisement