சினிமா

நடிகை யாஷிகாவுடன் பிரேக் அப் ஆனது ஏன்?? முதன்முதலாக உண்மையை உடைத்த பிக்பாஸ் நிரூப்! என்னனு பார்த்தீர்களா!!

Summary:

நடிகை யாஷிகாவுடன் பிரேக் அப் ஆனது ஏன்?? முதன்முதலாக உண்மையை உடைத்த பிக்பாஸ் நிரூப்! என்னனு பார்த்தீர்களா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கி  விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்ற நிலையில் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. இதில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைத்து டாஸ்க்குகளையும் அசத்தலாக விளையாடி இறுதி போட்டி வரை தகுதியானவர் நிரூப் நந்தகுமார். 

மேலும் அதில் அவர் 5வது இடத்தை பிடித்தார். தொழிலதிபரான நிரூப் மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரும் காதலித்ததாகவும், இருவருக்குமிடையே பிரேக்கப் ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவியது. மேலும் நிரூப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள யாஷிகாவும் முக்கிய காரணம் எனவும் கூறப்பட்டது. இதனை குறித்து நிரூப்பே பிக்பாஸ் வீட்டில் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமீபத்தில் நிரூப் அளித்த பேட்டியில், யாஷிகாவுடனான பிரேக்அப் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நானும் யாஷிகாவும் காதலித்தது உண்மைதான். நாங்கள் 2 பேருமே சேர்ந்து முடிவெடுத்துதான் பிரிந்து விட்டோம்.  யாஷிகாவின் பிரபலத்தினால்தான் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் பிரிந்ததற்கு காரணம் எங்கள் இருவருக்கும் செட்டாகவில்லை, அதனால் பிரிந்து விட்டோம். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. இருவருமே பேசிதான் பிரிந்தோம். பிரிந்த பின்பும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே உள்ளோம் என கூறியுள்ளார்.


Advertisement