சினிமா

முதலில் அம்மா..நேற்று அப்பா! கொரோனா தளர்வை தொடர்ந்து நடிகை நிலா வெளியிட்ட ஷாக் தகவல்!

Summary:

Nila post shock news about corono dead

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் கொரோனா குறைந்த பாடில்லை. 

மேலும் சமீபத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழ் சினிமாவில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை சமீபத்தில்  வெளியிட்டுள்ளார். 

அதில், சில தினங்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவர் கொரோனாவினால் தனது பெற்றோரை இழந்து விட்டார். முதலில் அவரது அம்மா,  நேற்று அவரது அப்பா. கொரோனா மக்களை கொன்றுகொண்டுள்ளது.


சில விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பாதுகாப்பு இல்லை. ஏதேனும் முக்கியமான தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லுங்கள். மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.


Advertisement