என்னம்மா ட்ரெஸ் இது டெண்ட் ஸ்கிரீன் மாதிரி... கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த ஆடையை பார்த்து வெச்சு செய்யும் ரசிகர்கள்!!Netizens trolls Keerthi Suresh latest custume

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து விஜய், விஷால், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுள் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கீர்த்தி நடிப்பில் தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் வெளிவந்த படத்திற்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.


இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது மலையாள இயக்குனர் வெங்கி சுவாமி - பூஜா அவர்களின் திருமணத்திற்கு கிளாமர் ஆடையில் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்னம்மா டெண்ட் ஸ்கிரீன் மாதிரி ஆடையணிந்துள்ளாறே என கிண்டல் செய்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.