ஏன் இப்படி பொய் சொல்றீங்க.. வசமாக சிக்கிய தாமரை! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

ஏன் இப்படி பொய் சொல்றீங்க.. வசமாக சிக்கிய தாமரை! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!


netisan-shares-thamarai-lied-proof-image

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகவும் நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், மோதல்கள் என சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. நடிகர் கமல் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்றனர். 

அவ்வாறு 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டு தற்போது மிகவும் திறமையாக விளையாடி அனைவரையும் அசரவைத்து வருபவர் நாடகக் கலைஞர் தாமரை. ஆரம்பத்தில் அப்பாவியாக இருந்த அவர் தற்போது விளையாட்டை நன்கு புரிந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஊதா மற்றும் சிவப்பு ஆகிய இரு அணிகளுக்கிடையே சமையல் போட்டி நடைபெற்றது.

bigboss

அதனை தொடர்ந்து வெற்றிபெற்ற அணியில் இருந்த தாமரை, அக்ஷரா, சிபி மற்றும் அபினய் ஆகியோருக்கு கேஸ் ஸ்டவ் பரிசாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாமரை எங்க வீட்டில் கேஸ் அடுப்பு இல்லை என கூறி துள்ளிகுதித்து மகிழ்ச்சியடைந்தார். இந்த நிலையில் நெட்டிசன்கள் அவரது வீட்டில் கேஸ் அடுப்பு உள்ளது என கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தாமரை கிச்சனில் கேஸ் அடுப்பிற்கு முன்பு நிற்கிறார். இந்நிலையில் தாமரை ஏன் இப்படி பொய் சொல்றீங்க? என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.