சினிமா

தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! உற்சாகத்துடன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!!

Summary:

nerkonda parvai movie release date announced

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இப்படம் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேகே ஆகும்.   இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.

மேலும் ஷ்ரதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே அபிராமி வெங்கடாஜலம், டெல்லி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.

nerkonda parvai க்கான பட முடிவு

இந்நிலையில் படப்பிடிப்பிற்கான வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டுள்ளது. மேலும் நேர்கொண்ட பார்வை படம் அஜித்தின் பிறந்தநாளான வரும் மே 1ம் தேதி  அன்று வெளியாகும் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.

ஆனால்  படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அதனை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


 


Advertisement