சினிமா

செம மாஸ் தகவல்! ஹீரோவாக களமிறங்கும் நீயா நானா கோபிநாத்! இயக்குனர் யார் தெரியுமா?

Summary:

Neeya naana gopinath new movie

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகிவரும் நீயா நானா தொடருக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு உண்டு. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு இதன் கான்செப்ட் ஒரு காரணமாக இருந்தாலும் இந்த தொடரின் தொகுப்பாளர் கோபிநாத்தும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.

நீயா நானா நிகழ்ச்சியையும் தாண்டி ஒருசில படங்களிலும் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார் கோபிநாத். சிறு சிறு வேடத்தில் நடித்துவந்த கோபிநாத் தற்போது ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

தமிழில் கண்ணுபட போகுதையா, தெலுங்கில் யுத்தம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாரதி கணேஷ் படத்தில்தான் கோபிநாத் ஹீரோவாக நடிக்க உள்ளார். வேலை வேலை என்றும் செல்லும் பெற்றோர்கள் மத்தியில் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement