சினிமா

பளீச் உடையில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை நீலிமா! அழகில் அம்மணி இளம் ஹீரோயின்களை ஓரம்கட்டிடுவார் போல...

Summary:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனை தொடர்ந்து அவர் தம், ம

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனை தொடர்ந்து அவர் தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல என ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகை நீலிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் அவர்  ஹீரோயினாக மட்டுன்றி, பல தொடர்களில் மிரட்டலான வில்லியாகவும் நடித்து வருகிறார். 21 வயதிலேயே திருமணமான இவருக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் நீலிமா ராணி அவ்வப்போது வித்தியாசமான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பார். இந்த நிலையில் அவர் தற்போது அழகான கண்ணை கவரும் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் தேவதை மாதிரி ஜொலிக்கிறிங்க என கமெண்டு செய்து வருகின்றனர். 


Advertisement