மீண்டும் களத்தில் இறங்கும் நஸ்ரியா!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வந்தவர் நஸ்ரியா. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்பட்டு வருகிறார். தமிழில் முதன் முதலில் நஸ்ரியா கதாநாயகியாக 'நேரம்' திரைப்படத்தில் நடித்தார்.
இவர், சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே மலையாள நடிகரான பகத் பாஸிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிவிட்டார். இருப்பினும் நஸ்ரியாவையும், அவரது கியூட்டான நடிப்பு திறமையும் ரசிகர்கள் இன்று வரை நியாபகம் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், தற்போது மீண்டும் நஸ்ரியா தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெப் சீரீஸ் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
.