கொலை வெறியோடு வெளியான நயன்தாராவின் கொலையுதிர் காலம் ட்ரைலர்.!

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பின்னர் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
புகழின் உச்சத்தில் உள்ள நயன்தாரா அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு வளந்துவிட்டார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு அவரின் 63 வது படமான ஐரா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சக்ரி டாலட்டி இயக்கிய ”கொலையுதிர் காலம்” என்ற திகில் படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார். இதில் பிரதாப் போத்தன், பூமிகா, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் டிரைலரும் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.