சேலையில் செம அழகாக இருக்கும் நயன்தாரா! புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

சேலையில் செம அழகாக இருக்கும் நயன்தாரா! புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!


Nayanthara latest photo with saree

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இட்டதை பிடித்துவிட்டார் நயன்தாரா.

முன்னணி நடிகர்களுடன் நடிப்பது மட்டும் இன்றி தனி ஒரு நடிகையாக இவர் நடிக்கும் படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெறுகிறது. தற்போது ஐரா படத்தில் முக்கியா கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் நயன். மேலும் விஜய்க்கு ஜோடியாக தளபதி 63 படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார்.

nayanthara

இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்கும் விஷயம் ஊருக்கே தெரிந்தது தான். இந்த ஜோடி அடிக்கடி தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.

தற்போது நயன்தாரா சேலையில் இருக்கும் போட்டோவை பதிவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு என் தங்கத்துடன் டின்னர் என பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அவர் பதிவிட்டுல அந்த புகைப்படத்தில் நயன்தாரா சேலையுடன் பயங்கர அழகாக தோற்றமளிக்கின்றார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.