மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
நயன்தாராவை முக்கியமான இடத்திற்கு அழைப்பு!. செல்வாரா? ஆவலுடன் எதிர்பார்ப்பு!
கோலிவுட் சினிமாவின் நம்பர் 1 ஹீரோயினான நயன்தாராவுக்கு "லேடி டான்", "லேடி சூப்பர் ஸ்டார்" என பெயர்களை ரசிகர்கள் கொடுத்துள்ளனர். தற்போது தமிழ் மாஸ் ஹீரோவான தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்திலும் நடித்துவருகிறார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு கேரளாவில் வெள்ளம் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இதற்கு மலையாள சினிமா நடிகர்களும், நடிகைகளும் நிதியுதவி செய்தார்கள். தமிழ் சினிமா பிரபலங்களும் நிவாரண நிதி அளித்துள்ளார்கள்.
கேரளாவில் சேதம் அதிகம் என்பதால் இன்னும் மக்களுக்கு உதவ மலையாள சினிமா பிரபலங்கள் டிசம்பர் 7 ம் தேதி அபுதாபியில் நட்சத்திர கலைவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். இதன் கலெக்ஷன் அந்த கேரள மக்களுக்கு தன என கூறப்படுகிறது.
மோகன் லால், மம்முட்டி, துல்கர் சல்மான், நிவின் பாலி, பிருதிவிராஜ் என பல பிரபலங்களுடன் நயன்தாராவிற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். அவர் கலந்துகொள்வாரா என எதிர்பார்க்கப்டுகிறது.