சினிமா

படத்திற்காக நயன்தாரா அப்படி செய்தது உண்மையா.? தயாரிப்பாளர் கூறிய உண்மை தகவல்.!

Summary:

Nayanthara effort for mookuthi amman movie

தமிழில் ஐயா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுமாமானவர் நடிகை நயன்தாரா. பல்வேறு காதல் சர்ச்சைகள், கிசு கிசு இவற்றையெல்லாம் கடந்து இன்று தென்னிந்திய அளவில் நம்பர் ஒன் நடிகை என்ற அளவில் உள்ளார் நயன்தாரா. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் இல்லாது, நல்ல கதை கொண்ட படங்களை தேர்வு செய்து தனி ஒரு நடிகையாகவும் சாதித்து வருகிறார் இவர்.

இந்நிலையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் அம்மனாக நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாராவின் நடிப்பு குறித்து பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கேரக்டர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தால் உண்மையான பக்தி பரவசம் வரும் என்பதை நயன்தாரா மூலம் நான் தெரிந்து கொண்டேன் என கூறினார்.

மேலும், மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன்தாரா 48 நாட்கள் அம்மனுக்கு விரதம் இருந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த தயாரிப்பாளர், நயன்தாரா 48 நாட்கள் அம்மனுக்கு விரதம் இருந்தது உண்மைதான் எனவும், அவருடைய இந்த தொழில் பக்தியை பார்த்து நான் உண்மையிலே ஆச்சரியமடைந்தேன் எனவும் கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.


Advertisement