நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

நயன்தாரா நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) ரிலீஸாகும் படம் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இயக்குனர் விக்னேஷ்சிவன் நயன்தாராவை வர்ணித்து பாடல் எழுதி உள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
விஜய் சேதுபதி ஜோடியாக நயன் நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றி டேட்டிங் செய்து வருகின்றனர். காதல் ஜோடிகளாக உலா வரும் இவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கோலிவுட்டில் பேச்சு உள்ளது.
இந்நிலையில் ‘கோலமாவு கோகிலா' படத்தின் ப்ரோமோஷன் பாடலை இயக்கும்போது நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.