தல அஜித்துடன் ஜம்முன்னு டிராக்டரில் அமர்ந்து ஊரை சுற்றி வந்த நயன்தாரா!

பொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசம் திரைப்படத்துக்கு, அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வீரம், விவேகம், வேதளம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து இதனையும் இயக்குநர் சிவாவே இயக்குகிறார்.
விஸ்வாசம் படத்தில் நடிகை நயன்தாராவும், அஜித்துடன் 4 ஆவது முறையாக கைகோர்த்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.
சேலை அணிந்து, கழுத்தில் நகைகள், நெற்றி வகிட்டில் குங்குமம் என அஜித்தின் மனைவியாக நடித்துள்ள நயன்தாராவின் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துடன் டிராக்டரில் செல்லும் போது எடுத்த புகைப்படத்தினை நயன்தாரா இன்று வெளியிட்டுள்ளார்.