தலயின் படத்தை வசூலில் பின்னுக்கு தள்ளயிருக்கும் நம்ம வீட்டு பிள்ளை! எத்தனை கோடி தெரியுமா!Namma veettu pillai ajith ner konda parvai

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தில் அண்ணன், தங்கை பாசம் அனைவரையும் ஒருவித சென்டிமென்டில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அனைத்து தர மக்களும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் சூரி, சமுத்திரக்கனி, பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

sivakarthikeyan

இந்நிலையில் தற்போது வந்த புதிய தகவல் படி நம்ம வீட்டு பிள்ளை படம் தற்போது வசூலில் 60 கோடியை கடந்துள்ளது. அதுமட்டுமின்றி பிகில் படம் ரிலீஸ் வரை எந்த ஒரு புது படமும் திரைக்கு வராத காரணத்தால் 75 கோடி வரை வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு முன்பு வெளியான மாஸ் நடிகரான தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் 73 கோடி வசூல் படைத்துள்ளது. இந்நிலையில் அந்த பட வசூலை சிவகார்த்திகேயனின் படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.