5 நாளில் நம்ம வீட்டு பிள்ளை இத்தனை கோடி வசூல் சாதனை படைத்துள்ளதா! சந்தோஷத்தில் பட குழு!

Nama vettu pillai


Nama vettu pillai

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை.

இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அனு இம்மானுவேல். மேலும் இப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Nama vittu pillai

சிவகார்த்திகேயன் ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த நிலையில் தன்னை வைத்து 2 ஹிட் கொடுத்த இயக்குனரான பாண்டிராஜ் இயக்கத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் உருவாகியிருந்த இப்படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டும் கடந்த 5 நாளில் 30 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. அதிலும் இன்று விடுமுறை என்பதால் இன்றும் அதிக வசூல் ஈட்டப்போகிறது நம்ம வீட்டு பிள்ளை.