அலட்சியமாக வாகனத்தை இயக்கியதால் சோகம்: நடிகர் கார் ஓட்டி 48 வயது பெண்மணி பரிதாப பலி.!

அலட்சியமாக வாகனத்தை இயக்கியதால் சோகம்: நடிகர் கார் ஓட்டி 48 வயது பெண்மணி பரிதாப பலி.!



nagabhushana-car-accident-case

 

கன்னட மொழியில் வெளியான 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நாகபூஷனா (வயது 37). இவர் படவா ராஸ்கல், ஹனிமூன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலம் அடைந்தார். 

இந்நிலையில், நேற்று இரவு 9:30 மணி அளவில் பெங்களூருவில் இருக்கும் உத்தரஹள்ளி பகுதியில் இருந்து கொனக்குண்டே பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். 

இந்த கார் வசந்தபுரம் பகுதியில் செல்லும் போது, நடைபாதையில் கிருஷ்ணா (வயது 58) - பிரோனா (வயது 48) தம்பதி நடந்து சென்று கொண்டிருந்தனர். 

இவர்களின் மீது கார் மோதியதில் பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். கார் மின்கம்பத்தில் மோதி நின்றது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், கிருஷ்ணாவிற்கு தீவிர காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக நடிகர் கைது செய்யப்பட்டார்.