
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவரது பாடல்கள் ரசி
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவரது பாடல்கள் ரசிகர்களை பெருமளவில் கவரும். தனது தந்தை இளையராஜாவைப் போலவே இவரது பாடல்களுக்கெனவும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. யுவன் சங்கர் ராஜா தற்போது அஜித்தின் வலிமை, விஜய் சேதுபதியின் மாமனிதன் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸஃப்ரூன் நிஸார் என்பவரை மணந்து இஸ்லாமிற்கு மாறினார். இவர்களுக்கு ஸியா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில்
யுவனின் மனைவி ஸப்ரூன் நிஸார், முதன்முறையாக சமீபத்தில் ஆன்லைன் மீடியா சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மிகவும் பொறுமையாகவும், சுவாரசியமாகவும் அவர் பதில் அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரிடம் தொகுப்பாளர், நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் 70கிலோ போதைப்பொருளுக்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர், யுவனைத் தானே கேட்கிறீர்கள். ஆமாம் வீட்டிலேயே 70 கிலோ போதை மருந்து வைத்திருக்கிறேன். எங்கே போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டு போறேன் என சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
Advertisement
Advertisement