இந்தியா சினிமா

சுஷாந்த் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்..! சுஷாந்த் வீட்டில் இருந்து போலீசார் கையில் சிக்கிய 5 முக்கிய டைரிகள்..! தீவிர விசாரணையில் மும்பை போலீஸ்..!

Summary:

Mumbai police found 5 important diary from sushanths room

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது வீட்டில் இருந்து 5 முக்கியமான டைரிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த வாரம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு எதிரான படத்தில் நடித்த ஒருவரே அந்த முடிவைத் தேடிக் கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், 34 வயதே ஆன நடிகர் சுஷாந்த் இளம் வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்த்துக்கொண்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில், அவரது குடும்பத்தினர் சிபிஐ விசாரணை கோரியுள்ளார்கள்.

மேலும், கடந்த சில காலங்களாக சுஷாந்த் பாலிவுட் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டதே அவரது மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், தற்கொலைக்கு முன் சுஷாந்த் எந்த ஒரு கடிதமும் எழுதிவைக்கவில்லை.

இந்நிலையில், சுஷாந்தின் அறையில் இருந்து 5 முக்கிய டைரி கைப்பற்றப்பட்டுள்ளது இந்த வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தான் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் தற்கொலை என்னும் கொடூர முடிவை எடுக்க என்ன காரணம் என்பது குறித்து சுஷாந்த் அந்த டைரிகளில் எழுதி வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது,


Advertisement