சினிமா

பிக்பாஸ் வெற்றியாளருடன் செல்பி எடுத்துக்கொண்ட இளம் பிரபலத்தின் அழகிய தங்கை.! கியூட் புகைப்படம் இதோ !!

Summary:

Mugen take selfie with tharshan sister

uபிக்பாஸ் சீசன் மூன்று  கடந்த 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும்  சென்றுகொண்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், லாஷ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகிய நால்வர் மட்டும் இறுதி கட்டத்திற்கு தேர்வானர்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போவது யார் என ரசிகர்கள் பெரும் ஆவலோடு இருந்த நிலையில், அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி, 50 லட்சம் பரிசு தொகையை வென்றார். மேலும் இரண்டாம் இடத்தை சாண்டி கைப்பற்றினர். மேலும் மூன்று மற்றும் நான்காம் இடத்தை லாஷ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியாளர்கள் நண்பர்களாக  உற்சாகமாக ஊர் சுற்றி வருகின்றனர். மேலும் சமீபத்தில் கூட சாண்டியின் வீட்டிற்கு அனைவரும் சென்று சாப்பிட்டு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டுள்ளனர்.

பிக்பாஸ் வெற்றியாளர் முகேனுடன் அனைவரும் ஆர்வத்துடன் செல்பி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தர்ஷனின் சகோதரி வெற்றியாளர் முகேனுடன் இணைந்து செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.


Advertisement