பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது இவர்தானா? வெளியான விறுவிறுப்பான வாக்கு லிஸ்ட் இதோ..

mugen going to win in bigboss


mugen-going-to-win-in-bigboss

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாகவும்,  பரபரப்பாகவும் இன்றுடன் 100வது நாளை கடந்துள்ளது. மேலும் 16 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்த பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது ஷெரின், லாஸ்லியா, முகேன்,  சாண்டி என நான்கு பேர் மட்டுமே இறுதி நிலையில் உள்ளனர். 

மேலும் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட தர்சன் பிக்பாஸ் கொடுத்த அனைத்து டாஸ்க்குகளையும் முழுமூச்சுடன் செய்து வந்தார். மேலும் அவர்தான் இறுதி வரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என அனைவரும் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

mugen

அதனை தொடர்ந்து பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போவது யார் என பெரும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்ட நிலையில் வாக்கெடுப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

மேலும் சாண்டி ஷெரின்ம் லாஸ்லியா, முகேஷ் என அனைவருமே நன்றாக விளையாட கூடியவர்கள் என்பதால் இந்த சீசனின் இறுதியில்  பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.  இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி இரு நாட்கள் நடைபெற்ற வாக்குகளில் முகேன் முதலிடத்திலும், லாஸ்லியா இரண்டாவது இடத்திலும், மற்றும் சாண்டி மூன்றாவது இடத்திலும் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

mugen
இந்நிலை தொடர்ந்தால் முகேஷ் பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் பட்டத்தை தட்டி செல்வார்.. மேலும் மேஜென் நேரடியாக பைனல் செல்லும் கோல்டன் டிக்கெட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

mugenmugen