சினிமா

Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் என்ன தெரியுமா? வெளியான தகவல்கள்!

Summary:

Mr local movie 5 days collection details

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற இடத்தை பிடித்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் முழுக்க முழுக்க தனது திறமையால் மட்டுமே இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் வெளியான இவரது படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனால், சமீபகாலமாக சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா, கடந்த வாரம் வெளியான Mr . லோக்கல் போன்ற படங்கள் தோல்வியையே தழுவியுள்ளது. இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதிஷ், யோகிபாபு, ரோபோ சங்கர் போன்ற பல பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் Mr . லோக்கல்.

சீமராஜா தோல்விக்கு பிறகு Mr . லோக்கல் ஓரளவிற்கு கைகொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் இந்த படமும் தோல்வியை தழுவியதால் மிகுந்த சோகத்தில் உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் படத்தின் 5 நாள் வசூல் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. 5 நாளில் வெறும் 2 . 5 கோடியே வசூலாகி இருப்பதால் மிகுந்த சோகத்தில் உள்ளது படக்குழு. 


Advertisement