உதயநிதியை வைத்து ஆடையில்லாமல் போட்டோஷூட் நடத்திய மிஷ்கின்..!! அவங்க சொன்னதால., கற்பனைக்கு வந்ததை செய்தேன் - ஓபன்டாக்..!!

உதயநிதியை வைத்து ஆடையில்லாமல் போட்டோஷூட் நடத்திய மிஷ்கின்..!! அவங்க சொன்னதால., கற்பனைக்கு வந்ததை செய்தேன் - ஓபன்டாக்..!!


mishkin-photoshoot-with-uthayanidhi

கோலிவுட்டில் வித்தியாசமான படங்களை கொடுக்கும் மிஸ்கின், தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் முக்கியமானவராக வலம்வருகிறார். இயக்குனர் வின்சன்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஸ்கின், நடிகராவும் இருக்கிறார். சரித்திரம் பேசுதடி படத்தின் மூலமாக இயக்குனராக தொடங்கிய மிஸ்கின் அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 

Uthayanidhi

கடந்த 2014-ல் வெளியான பிசாசு திரைப்படம் தமிழ் திரையுலகில் பேயை அன்பாக சித்தரித்து தந்தையின் பாசத்தால் பரிதவிக்க வைத்த திரைப்படத்தில் முக்கியமானதாகும். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Uthayanidhi

இந்நிலையில், மிஸ்கின் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "கிருத்திகா உதயநிதி என்னை ஒருமுறை நேரில் சந்தித்து உதயநிதியை வைத்து படம் எடுக்க கூறியிருந்தார். நான் உதயநிதியை வைத்து ஆடையில்லாமல் போட்டோசூட் நடத்தினேன். எனக்கு கற்பனைக்கு வந்ததை போட்டோசூட்டாக எடுத்தேன். அதற்குப்பின் தான் யுத்தம் செய் படத்தின் கதையெழுதும் வேலை தொடங்கியது. 

Uthayanidhi

உதயநிதியே அக்கதைக்கு சரியாக இருப்பார் என்று கதையை எழுதி முடித்துவிட்டு கதையை கூறியதும், உதயநிதியோ என்னால் படத்தில் நடிக்க இயலாது. படத்தில் இவ்வுளவு கொலையா? என்று கூறினார். எனக்கு அது கஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் சேரனை வைத்து படத்தை எடுத்தோம். 

Uthayanidhi

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படம் நான் எழுதிய கதைப்போலவே இருந்தது. அவர் எனது படத்தில் நடிக்காதது வருத்தம். அதன்பின்னரே சைக்கோ படம் உதயநிதியின் நடிப்பில் எடுக்கப்பட்டது. அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவம்" என்று தெரிவித்தார்.