சினிமா

தளபதி-63: விஜய்யுடன் இணையும் மற்றும் ஒரு பிரபல இளம் நடிகை! யார் தெரியுமா?

Summary:

Meyatha maan indhuja joining in thalapathi 63 movie

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது அட்லீ, விஜய் கூட்டணி. ஏற்கனவே வெளியான இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றுள நிலையில் தளபதி - 63 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த படத்தினை AGS நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார் படத்தின் இயக்குனர் அட்லீ. முன்னதாக படத்தின் நாயகி யார் என்பதுபற்றி சமூக வலைத்தளங்களில் வெவேறு கருத்துக்கள் பரவி வந்தன. இறுதியாக படத்தின் நாயகி நயன்தாரா என உறுதி செய்தார் இயக்குனர் அட்லீ.

மேலும் ராஜா ராணி படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவை இயக்குவது சந்தோசமாக உள்ளதாகவும் கூறினார் இயக்குனர். தற்போது தளபதி 63 பதில் மேலும் ஒரு இளம் நடிகை சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை இந்துஜா நடிக்க உள்ளாராம். மேயாத மான் என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்த இந்துஜா சமீபத்தில் வெளியான ‘பில்லா பாண்டி’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement