பிரபல முக்கிய கட்சியில் இணைகிறாரா சர்ச்சை நடிகை மீரா மிதுன்! புகைப்படத்துடன் வெளியிட்ட அதிரடி பதிவு!

பிரபல முக்கிய கட்சியில் இணைகிறாரா சர்ச்சை நடிகை மீரா மிதுன்! புகைப்படத்துடன் வெளியிட்ட அதிரடி பதிவு!


Meera mithun tweet and tag to udhayanithi stalin

தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தவர் மாடல் அழகியான மீரா மிதுன். எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் சர்ச்சையைக் கிளப்பி வந்த மீரா மிதுன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரன் மீது, தவறான கருத்துக்களை கூறி அவதூறு பரப்பினார். அதனால் இவருக்கு சமூக வலைதளத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.  இவ்வாறு செல்லும் இடமெல்லாம் மீரா மிதுன்சர்ச்சையை கிளப்பி வந்தார்.

மேலும் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி அவ்வப்போது  பிரபல நடிகைகளை வம்பிற்கு இழுத்தும் பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார். 

இந்நிலையில் மீரா மிதுன் சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், நாம் இணைந்து புதிய சகாப்தம் படைப்போம். வெற்றி பெறுவோம் என பதிவிட்டு அதனை ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு டேக் செய்துள்ளார். இதனால் மீரா மிதுன் திமுக கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது.