சினிமா

இதுக்குமேல நடிகர் சிவகுமாரை யாராலும் கலாய்க்க முடியாது! வைரலாகும் மீம்ஸ் வீடியோ!

Summary:

Meeme creators special video for actor sivakumar

சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு மருத்துவமனை திறப்புவிழா ஒன்றிற்கு சென்றிருந்த நடிகர் சிவகுமார் அங்கு தன்னுடன் செலஃபீ எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டி விட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீதி, நேர்மை, நியாயம், பொறுமை என பேசும் நடிகர் சிவகுமார் இவாறு நடந்துகொண்டது பல விமர்சனங்களுக்கு உள்ளது.

ஒருவழியாக அந்த இளைஞருக்கு புது தொலைபேசி வாங்கிக்கொடுத்து, அந்த சம்பவத்துக்கு மன்னிப்பும் கோரியிருந்தார் நடிகர் சிவகுமார். இந்த சம்பவம்பற்றி யாரும் மறந்திராத நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அதேபோன்று ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார் நடிகர் சிவகுமார்.

திருமணம் ஒன்றிற்கு சென்றிருந்த சரத்குமார் அங்கு தன்னுடன் புகைப்படம் எடுக்க முயன்ற ஒருவரின் போனை தட்டிவிட்டுள்ளார். அந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி இன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இந்நிலையில் சும்மாவே மீமி போடும் நம்ம ஆளுங்களுக்கு இந்த சம்பவம் பற்றி சொல்லவா வேண்டும். ஆளாளுக்கு மீமி போட்டு நடிகர் சிவகுமாரை வச்சு செய்துவருகின்றனர் மீமி க்ரியேட்டர்ஸ். அதில் விஸ்வாசம் படத்தின் ட்ரைலரை மிக்ஸ் செய்து மீமி கிரியேட்டர்கள் செய்துள்ள வீடியோ வேகமாக பரவி வருகிறது.Advertisement