சினிமா

அடேங்கப்பா.. நடிகர் மயில்சாமியா இது! செம மாடர்னாக ஸ்டைலாக இளம் ஹீரோக்களையே மிஞ்சிட்டாரே!

Summary:

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவி

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகர் மயில்சாமி. முக்கிய காமெடி நடிகராக வலம் வரும் இவர் தனது உடல் பாவனைகளாலும், நடிப்பாலும் தமிழ் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 90ஸ் காலகட்டங்களில் தொடங்கி இன்றுவரை அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட அவர் ஓடிடி தளத்தில் வெளிவந்த மலேசியா டூ அம்னீசியா என்ற படத்தில் நடித்திருந்தார். சிறு   கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை அனைவரும் ரசிக்கும்படி நடிகர் மயில்சாமி இயல்பாக நடித்திருப்பார். சமீபகாலமாக நடிகர், நடிகைகள் வித்தியாசமாக, பல கெட்டப்புகளில் போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறு மயில்சாமியும் தற்போது போட்டோஷூட்டில் இறங்கியுள்ளார். இவர் சமீபத்தில் பிகில் ராயப்பன் கெட்டப்பில் போட்டோஷூட் செய்து இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது கோட் சூட் அணிந்து கையில் குடையுடன் கெத்தாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement