பருத்திவீரன் பஞ்சாயத்தால்.. தனுஷுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்.! வெற்றிமாறன் வைத்த ஆப்பு.! 

பருத்திவீரன் பஞ்சாயத்தால்.. தனுஷுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்.! வெற்றிமாறன் வைத்த ஆப்பு.! 


May vadivasal Hero Changed

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கின்ற திரைப்படம் தான் வாடிவாசல். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் அமீரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. தற்போது அதற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதாவது இயக்குனரும், நடிகருமான அமீர் தான் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா பதிலடி கொடுத்தார்.

Vadivasal

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இது பெரும் பேசு பொருளாக மாறிய நிலையில், பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் நடிக்கின்ற வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் நடிக்க இருப்பது சூர்யாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கதாபாத்திரத்தை வேறு எவராலும் நடிக்க முடியாது அமிர் தான் நடிக்க வேண்டும் என்று வெற்றிமாறன் மிகவும் உறுதியாக இருக்கிறாராம். 

Vadivasal

நிலைமை இப்படி இருக்க பட தயாரிப்பாளரான கலைப்போலி எஸ் தாணு, இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார். மேலும் ஏற்கனவே படம் தாமதமாவது அவருக்கு எரிச்சலூட்டும் நிலையில், அடுத்த பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது. 

சூர்யா இந்த படத்தில் அமீர் நடிக்க கூடாது என்பதில் மிக உறுதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், படத்திலிருந்து விலகக்கூட தயார் என்று சவால் விடுவதாகவும் எனவே இந்த படத்தில் சூர்யாவை தூக்கிவிட்டு அவருக்கு பதில் நடிகர் தனுஷை கமிட் செய்யலாம் என்று தாணுவிற்கு வெற்றி மாறன் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.