சினிமா

இந்தியளவில் டாப் 10 பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்த தளபதி படம்! அடுத்தடுத்து எந்த படங்கள் உள்ளன பார்த்தீர்களா!

Summary:

2020 ஆம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் மாஸ்டர் திரைப்படம் முதல் இடத்தை பிடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளது.

2020ம் ஆண்டு இன்னும் சில நாட்களிலேயே நிறைவடைய இருக்கும் நிலையில் டுவிட்டர் இந்தியா இந்த ஆண்டு இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டாக், நடிகர்கள், நடிகைகளின் படங்கள், திரைப்படங்கள் குறித்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு வருகிறது. இவ்வாறு சில தினங்களுக்கு முன்பு, 2020-ம் ஆண்டு வெளியான படங்களின் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேகில் #SooraraiPottru திரைப்படம் முதல் இடத்தைப் பிடித்தது.

அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் இந்தியளவில் நடிகைகள் குறித்த ட்வீட்களில் டாப் 10 பட்டியலில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதலிடம் வகித்தார்.  பின்னர் திரைப்படங்கள் டுவிட்டரில் படைத்த சாதனை பட்டியலில் ஏராளமான வெளியான மற்றும் வெளியாகாத படங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி கொரோனா ஊரடங்கால் ரிலீஸாவது தள்ளிப்போன மாஸ்டர் திரைப்படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அப்படத்தை தொடர்ந்து #VakeelSaab #SarkaruVaariPaata #Valimai #Sooraraipotru #RRR #Pushpa #SarileruNeekevvaru #KGFChapter2 #Darbar ஆகிய படங்கள் வரிசையான இடங்களை பிடித்துள்ளது. 


Advertisement