அட நம்ம மன்சூர் அலிகானா இது.. சிறுவயதில் ஹீரோ மாதிரி இருகிறாரே.!

அட நம்ம மன்சூர் அலிகானா இது.. சிறுவயதில் ஹீரோ மாதிரி இருகிறாரே.!


Mansoor Ali khan childhood photos

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் இருந்து தற்போது வரை, பல வில்லன் நடிகர்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். அவர்களில் வெகு சிலரே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

Kollywood

அந்த வகையில், 90களில் தன் மிரட்டலான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தவர் மன்சூர் அலிகான். மும்பையில் அனுபம் கெரின் நடிப்பு மும்பை பள்ளியில் தனது பயிற்சியை பெற்ற மன்சூர் அலிகான், விஜயகாந்த் நடித்த "கேப்டன் பிரபாகரன்" படத்தில், மிரட்டலாக நடித்து, கவனத்தைக் கவர்ந்தார்.

ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்து வந்த மன்சூர் அலிகான், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது சிறு வயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Kollywood

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், "அட! நம்ம மன்சூர் அலிகானா இது! வயசிலும் வில்லனைப் போலவே, அதே சமயம் அழகாகவும் இருக்கிறாரே" என்று ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கூறி வருகின்றனர்.