சினிமா

ஒவ்வொரு அஜித் ரசிகனும் மறக்க கூடாத நாள் இன்று! அப்படி என்ன நாள்னு யோசிக்கிறீங்களா?

Summary:

Mankatha movie celebrating 7th year of success

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித், அர்ஜுன், த்ரிஷா ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா. அஜித் நடித்த படங்களில் ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு படம் என்றால் அது மங்காத்தா என்று சொல்லலாம். வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் அஜித்திற்கு 50வது படம், ரசிகர்களுக்கு மாஸ் படமாகவும் அமைந்தது. அதுவும் தன்னுடைய 50வது படத்தின் அஜித் வில்லனாக நடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

யுவன் இசையில் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் பெரிய அளவில் வெற்றிபெற்றது. யுவன் ஷங்கர் ராஜா பற்றி சொல்லவே தேவையில்லை, அஜித்திற்கு எப்படி ஒரு மாஸ் இசை கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பவர். இப்படம் வெளியாகி இன்றோடு 7 வருடங்கள் ஆகும் நிலையில் அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இதனை கொண்டாடும் விதமாக வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் #HappyMankathaDay #7YearsOfMankatha போன்ற டாக்குகளை டிரண்ட் செய்து வருகின்றனர். உங்கள் பங்கிற்கு நீங்களும் இந்த செய்திதை ஷேர் செய்து கொண்டாடுங்கள்.


Advertisement