அசுரன் பட நடிகைக்கு கொலை மிரட்டலா? உயிருக்கு ஆபத்து என போலீசில் அதிர்ச்சி புகார்.

Manju warriar police complaint about producer


Manju warriar police complaint about producer

சமீபத்தில்  நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் அவரது மனைவியாக நடித்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியர். தனது முதல் படத்திலையே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168வது படத்திலும் நடிக்கிறார் என தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியார்  பிரபல தயாரிப்பாளர் VA ஸ்ரீகுமார் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கேரளா டிஜிபியிடம் ஒரு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

manju warrier

மேலும் தான் கையெழுத்து போட்ட பிளாங்க் செக்குகளை வைத்து VA ஸ்ரீகுமார் பல்வேறு மோசடி செய்திருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ள அவர் VA ஸ்ரீகுமாரால் தான் மனத்தளவில் மிகுந்த வேதனை அடைந்திருப்பதாகவும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.

பிரபல நடிகை ஒருவர் தயாரிப்பாளர் மீது புகார் கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.