சினிமா

பிரபல நடிகருடன் இணைந்த நயன்தாரா.! புகைப்படத்தை கண்டு இந்த இளம்நடிகை என்ன கூறியுள்ளார் தெரியுமா!!

Summary:

manjima mohan wish for nayantha nivin pauly movie

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகிதென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.

தொடர்புடைய படம்

தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 63 படத்திலும், ரஜினிக்கு ஜோடியாக தர்பார் படத்திலும் நடித்துவருகிறார்.மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில், நயன்தாரா தற்போது மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். காதல் கலந்த ஆக்சன் படமாக  உருவாகும் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தை தியான் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். இந்த ஆண்டின் ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக வெளிவரவிருக்கும் இப்பட்ட்டத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மலையாள ரசிகர்களிடையே பெரும் ஏற்பரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்திற்கு வாழ்த்து கூறி நடிகை மஞ்சிமா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement