சினிமா

குண்டானதை குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு மஞ்சிமா மோகன் கொடுத்த தக்க பதிலடி! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா...

Summary:

குண்டானதை குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு மஞ்சிமா மோகன் கொடுத்த தக்க பதிலடி! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா...

தமிழில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்கிற படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னர் சத்ரியன், தேவராட்டம், துக்ளக் தர்பார் என வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் FIR திரைபடத்தில் அவர் நடித்து இருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும்  இருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது உடல் எடை கூடி குண்டாகி இருக்கிறார். பேட்டி ஒன்றில் உடல் எடை  குறித்து ரசிகர்களின்  கேள்விக்கு பதிலளித்த மஞ்சிமா மோகன், ஒல்லியாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை, ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் இருந்தால் போதும். ஒல்லியாக இருந்தால் ஏன் நீங்க ஒல்லியா  இருக்கீங்க என கேட்பாங்க. நீங்கள் எப்படி இருந்தாலும் body shaming இருக்கத்தான் செய்யும்.மேலும் சாய்பல்லவியை பாருங்க. அவர் எவ்வளவு உறுதியாக ஆக தன்னை காட்டிக்கொள்கிறார். அவர் மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷன்" எனவும் கூறியுள்ளார்.

 


Advertisement